இலங்கையில் கிராமப்புற பாதைகளில் இயக்குவதற்காக மூன்று பெட்டிகள் கொண்ட சிறிய ரயில்களை உருவாக்க இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அம...
இலங்கையில் கிராமப்புற பாதைகளில் இயக்குவதற்காக மூன்று பெட்டிகள் கொண்ட சிறிய ரயில்களை உருவாக்க இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த புகைவண்டிகளில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் மின்னணு அமைப்பால் கட்டுப்படுத்தப்படும் ரயில் பெட்டிகளை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.என்று தெரிய வருகிறது
இந்த சிறிய ரயில்களில் சுமார் 200 முதல் 240 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
ஆனால் முன்பு சில புகைவண்டிப் பேருந்துகள் (ரயில் பாதைகளில் ஓடக்கூடிய சக்கரங்களைக் கொண்ட ஒரு பெட்டி பேருந்து) இருந்தன.
ஆனால் தற்போதுள்ள கால அட்டவணைகளுடன் அவற்றை இயக்குவதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிக்கல் எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது
குறிப்பாக
சிறிய ரக புகையிரத வண்டிகள் என்று குறிப்பிட்டால், அது இலங்கைப் புகையிரத சேவையில் பயன்படுத்தப்படும் M4 ரக புகையிரத எஞ்சின்கள் அல்லது பிற சிறிய இயந்திரங்களைக் குறிக்கலாம்.
குறிப்பாக கனடாவிலிருந்து வந்துகொண்டிருந்த M4 ரக எஞ்சின்கள் சிறிய வகையாக இருந்தன, மேலும் இலங்கைப் புகையிரத சேவை, கனடிய மாகாணங்கள் மற்றும் நகரங்களின் பெயர்களை இந்த எஞ்சின்களுக்குச் சூட்டியிருந்தது
No comments